உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறிஆன்‍லைனில் 10 நாட்களில் ரூ.1 கோடி மோசடி

பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறிஆன்‍லைனில் 10 நாட்களில் ரூ.1 கோடி மோசடி

பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறிஆன்‍லைனில் 10 நாட்களில் ரூ.1 கோடி மோசடிவேலுார்:வேலுார் மாவட்டத்தில், பங்கு சந்தையில் முதலீட்டில் அதிக லாபம் எனக்கூறி பொதுமக்களிடம் கடந்த, 10 நாட்களில், ஆன்லைன் மூலம் ஒரு கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில், கடந்த சில மாதங்களாக பகுதிநேர வேலை, நீட் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு அரசு நிதியுதவி மற்றும் பங்கு சந்தை முதலீடு மூலம் அதிக லாபம் எனக்கூறி, ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி, வேலுார் மாவட்டத்தில், ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி வலையை விரித்துள்ளனர். அதில், 10,000 ரூபாய் டிபாசிட் செய்தால், நாளொன்றுக்கு, 3,000 முதல், 5,000 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக தெரிவித்து, முதலில், 10,000 ரூபாயை டிபாசிட் செய்ய வைத்து, 3,000 ரூபாய் வழங்கி விட்டு பின்னர், லட்சக்கணக்கில் பணம் கட்டியவுடன் இணைப்பை துண்டித்து விட்டு மோசடி செய்துள்ளனர். இது போன்று, கடந்த, 10 நாட்களில் மட்டும், 15க்கும் மேற்பட்டோரிடம், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இது குறித்து விசாரித்து வரும், வேலுார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சைபர் குற்றவாளிகளிடம், பொதுமக்கள் சிக்கி விடுகின்றனர். தங்கள் வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடியாக பணம் எடுத்து விட்டால், உடனடியாக, 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் அப்பணத்தை, மர்ம நபர்கள் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்குள் தடுக்க முடியும். ஆன் லைனில் பகுதிநேர வேலை, போலீசார் பேசுவது, டிஜிட்டல் கைது எனக்கூறி வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை