மின்தடை அறிவிப்பில் அலட்சியம்குழப்பத்தில் பொதுமக்கள்
மின்தடை அறிவிப்பில் அலட்சியம்குழப்பத்தில் பொதுமக்கள் போச்சம்பள்ளி, :போச்சம்பள்ளியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிப்பாணை வெளியிடுவது வழக்கம். கடந்த டிச., 12ல் போச்சம்பள்ளி, பண்ணந்துார், மத்துார் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று மின்தடை செய்யவில்லை. அதேபோல் நேற்று மீண்டும் போச்சம்பள்ளி, பண்ணந்துார், மத்துார் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாளிதழ்களில் மின்தடை அறிவிப்பு என செய்தி வெளியானது. ஆனால் மின்தடை செய்யவில்லை.தொடர்ந்து, 2 மாதங்களாக மின்தடை அறிவித்து விட்டு, மின்தடை செய்யாமல் உள்ளதால், வியாபாரிகள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மின்தடை அறிவிப்பை நம்புவதா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளனர்.