உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வக்கீல்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு- சார்பில், தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.இதில், வக்கீல் தொழிலுக்கு எதிராக, ஜனநாயக விரோத சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வருவதை கைவிட வேண்டும். வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வக்கீல்களை இந்தியாவில் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.வக்கீல் சட்ட திருத்த வரைவு மசோதா, -2025 மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். வக்கீல் சேமநல நிதியை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். உயர்த்தப்பட்ட சேமநல முத்திரை கட்டணத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !