உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனத்தில் வாலிபர் மர்ம மரணம்சடலம் மறு பிரேத பரிசோதனை

வனத்தில் வாலிபர் மர்ம மரணம்சடலம் மறு பிரேத பரிசோதனை

வனத்தில் வாலிபர் மர்ம மரணம்சடலம் மறு பிரேத பரிசோதனைதர்மபுரி:தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே, ஏமனுார் வனப்பகுதியில், ஆண் யானை ஒன்று உடல் எரிந்த நிலையில், மார்ச், 1ல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் தந்தத்துக்காக யானை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு, உடலை எரித்தது தெரிந்தது. விசாரணைக்காக அழைத்து சென்ற கொங்கரப்பட்டியை சேர்ந்த செந்தில், கடந்த மாதம் மார்ச், 18ல் தப்பியதாக கூறப்பட்டது.கடந்த, 4ல் அவரது உடல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. செந்தில் மனைவி சித்ரா தரப்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. தன் கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கருதுவதால், எங்கள் தரப்பு மருத்துவரை வைத்து, பிரேத பரிசோதனை செய்ய, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க, சித்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேற்று, தர்மபுரி அரசு மருத்துவமனையில் செந்தில் சடலம் மறு பிரேத பரிசோதனை நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லுாரி மருத்துவர் தண்டர்ஷிப், செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவர் கார்த்திக், சேலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவர் கோகுல ரமணன் மற்றும் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., வினோத், இன்ஸ்பெக்டர் அமுதா, செந்திலின் மனைவி சித்ரா ஆகியோர் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ