உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜேக்டோ - ஜியோ கோரிக்கையை நிறைவேற்றிவிதி 110ன் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும்

ஜேக்டோ - ஜியோ கோரிக்கையை நிறைவேற்றிவிதி 110ன் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும்

'ஜேக்டோ - ஜியோ கோரிக்கையை நிறைவேற்றிவிதி 110ன் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும்'பாப்பிரெட்டிப்பட்டி:--ஜேக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியர் முன்னேற்ற சங்க, மாநில தலைவருமான தியாகராஜன், தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இம்மாதம் இறுதி வரை நீடிக்கவுள்ளது. இதில், ஜேக்டோ -- ஜியோ அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி விதி எண், 110 -கீழ் அரசு அறிவிக்க வேண்டும்.கடந்த லோக்சபா தேர்தலில், பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைளை குறித்து பேசாத நிலையில், தி.மு.க., மட்டுமே நிறைவேற்றி தருவதாக அறிவித்தது. இதை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க., அரசு பதவியேற்று, நான்காண்டுகள் ஆகியும் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் போராடுவதை தவிர வேறு வழியில்லை.கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜேக்டோ -- ஜியோ அமைப்பின் சார்பில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்போம். சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள் விதி எண், 110ன் கீழ் அறிவிப்புகளை முதல்வர் அறிவித்து, எங்களை மேற்கொண்டு போராட்டத்தில் தள்ள மாட்டார் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ