உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்காரிமங்கலம் : காரிமங்கலத்தில், நொரம்பு மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று மல்லிகுட்டை பகுதியில், போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது, மல்லிகுட்டை பஞ்., போத்தாபுரம் ஏரியில் நொரம்பு மண் கடத்துவது தெரிந்தது. டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றவர்களை சுற்றி வளைத்தனர். லாரி உரிமையாளர் தப்பினார். டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, காரிமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. தலைமறைவான நிம்மாங்கரையை சேர்ந்த முனியப்பன், 44, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ