உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வடமாநில ‍தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி

வடமாநில ‍தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி

வடமாநில ‍தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலிபாலக்கோடு, :பீஹார் மாநிலம் டைனிமான் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார், 32. இவர் மனைவி அனிதாதேவி, 28. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். சஞ்சீவ்குமார் பெங்களூருவிலுள்ள மாரத்தஹள்ளியில் தங்கி கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார்.தன்னுடன் பணிபுரியும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த செங்கோடப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாந்தநாதன், 40, என்பவருடன் சேர்ந்து, பொங்கல் கொண்டாட செங்கோடப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். கடந்த, 14ல் நண்பர்களுடன், பாலக்கோடு அடுத்த தொல்லக்காது என்ற இடத்தில், சின்னாற்றில் குளித்தபோது, சஞ்சீவ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மாரண்டஹள்ளி போலீசார், அவரது சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ