உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோட்டில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோட்டில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாலக்கோட்டில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்பாலக்கோடு, : பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன், ஓடை புறம்போக்கு பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய அணி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிக்கமாரண்டஹள்ளி புதுார் கிராமத்தில் நீண்ட காலமாக ஓடை புறம்போக்கு பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று வரவும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது, தனி நபர் சிலர் இந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்து கம்பிவேலி அமைத்து அடைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பில் உள்ள இந்த ஓடை புறம்போக்கு பாதையை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ