உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போச்சம்பள்ளியில் நாளை தி.மு.க. பொதுக்கூட்டம்

போச்சம்பள்ளியில் நாளை தி.மு.க. பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: -மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பிறகும், பேரிடர் மேலாண்மைக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில், தமிழகம் என்ற பெயரை கூட உச்சரிக்காதது என, மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இதை கண்டித்து நாளை (சனிக்கிழமை) மாலை, 5:00 மணிக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில், கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க., தலைமை கழக தலைமை சட்ட ஆலோசகர், வில்சன் எம்.பி., மற்றும் தி.மு.க. இலக்கிய அணி மாநில செயலாளர் கலைராஜன் ஆகியோர் பேசுகின்றனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ