உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாயியின் ஆட்டு கொட்டகைக்கு தீ

விவசாயியின் ஆட்டு கொட்டகைக்கு தீ

விவசாயியின் ஆட்டு கொட்டகைக்கு தீ பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம் அருகே, விவசாயியின் ஆட்டு கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, சின்னம்மசமுத்திரம் 2வது வார்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி மதுரை வீரன், 42. இவரது ஆட்டு கொட்டகை நேற்று காலை, 9:00 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, ஆடுகளை அவிழ்த்து விட உள்ளே சென்றார். அப்போது, மதுரை வீரனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின், ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.இது குறித்து, ஏத்தாப்பூர் போலீசார் கூறுகையில்,' சின்னம்மசமுத்திரம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், புதிதாக தேர் செய்ய அப்பகுதியில் ஊர் கூட்டம், நேற்று முன்தினம் நடந்துள்ளது. இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக மதுரை வீரன் இருந்துள்ளார். இதனால் முன்விரோதம் காரணமாக, எதிர் தரப்பினர் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை