அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை
அரசு கல்லுாரியில் பயிற்சி பட்டறை பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லுாரியில், இயற்பியல் துறை சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, எல்.இ.டி., லைட்ஸ் அசெம்பிளி அண்ட் டிசைனிங் டெக்னாலஜி எனும் தலைப்பில், ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்தார். விரிவுரையாளர்கள் ஜோதி, தங்கராசு, முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ விரிவுரையாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொறியாளர் இளவரசன் பேசினார். மூன்றாம் ஆண்டு மாணவன் மோகன் குமார் நன்றி கூறினார்.