வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆகாஷ் வாணி என்பதை தமிழகம் எதிர்த்தபோது அகில இந்திய வானொலி என மாற்ற சொன்னது. அதை ஏற்காமலே டில்லி “ஆல் இந்தியா ரேடியோ” என்று அறிவித்தது. அது எப்போது மீண்டும் ஆகாஷ் வாணி ஆனதோ தெரியவில்லை. இப்படி இந்தி வெறியாக உள்ளவர்கள் முன்னொரு காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு - நீங்கள் கேட்டவை அறிவிப்பாளர் உங்கள் அன்பன் B S அப்துல் ஹமீது என்பாரே மறக்க முடியுமா? அடுத்து “ஆல் இந்தியா ரேடியோ டில்லி வானொலி நிலையம் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி” என்ற அந்த கனத்த பெண்மணியின் குரல். அழுத்தம் திருத்தமான அவரது குரலில் சற்றும் பிசகாத தமிழ் சொற்களால் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் அந்த “அவசர நிலை” கால செய்திகளை கேட்டு தெரிந்து கொள்ள பல ஊர்களிலும் டீக்கடை வாசலில் சிறு கூட்டம் ஸ்தம்பித்து நிற்குமே மறக்க முடியுமா? அவர்களெல்லாம் தனது செய்தி அறிவிப்பாளர் பணியில் ஒரு தனி முத்திரை பதித்தார்கள். இன்று எங்கே போனது அதெல்லாம்? இன்று யாரும் எதிலும் முத்திரை பதிக்க எண்ணுகிறார்களா? இல்லை கூலிக்கு மாரடிக்கிறார்கள், கடனுக்கு அழுகிறார்கள் எனலாம். ஆம் நாம் மனித இனத்தின் விழுமியங்கள் நற்குணங்கள் பலவற்றை தொலைத்து விட்டோம். மக்கள் மட்டுமல்ல அரசாங்கமும் பணமே குறிக்கோளாக ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக ஓடிக்கொண்டேயிருக்கிறோம். If you would not be forgotten as soon as you are dead, either write something worth reading or do things worth writing
மேலும் செய்திகள்
எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனைவோர் கருத்தரங்கு
23-Feb-2025