மேலும் செய்திகள்
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
12-Mar-2025
பரவலாக சாரல் மழையால்குளிர்ச்சியான சீதோஷ்ணம்தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 2 மாதமாக வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து, இரவும் மழை தொடர்ந்தது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, அரூரில், 29, பாப்பிரெட்டிபட்டி, 18, பாலக்கோடு, 17, நல்லம்பள்ளி, 8.5, மாரண்டஹள்ளி, 8, மொரப்பூர், 7, ஒகேனக்கல், 3, தர்மபுரி, 1 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது. இதில், மாவட்டத்தில் சராசரியாக, 10.3 மி.மீ., மழை பதிவானது. * அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் காலை முதல், விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.இதனால், தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. அரூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், நான்குரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
12-Mar-2025