விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமியின்போட்டி தேர்வுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி
விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமியின்போட்டி தேர்வுக்கான வழிகாட்டு நிகழ்ச்சிதர்மபுரி:தர்மபுரியில், விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வரும், விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி.,அகாடமி சார்பில், அரசு போட்டி தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி மகேஸ்வரன், விருப்ப பாடத்தை தேர்வு செய்வது எப்படி, நேர்முக தேர்வில் சாதிப்பது எப்படி, முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வில் சாதிப்பது எப்படி, தேர்வில் வெற்றி பெற திட்டமிடுவது எப்படி என்பது குறித்து விளக்கமளித்தார்.தொடர்ந்து, தமிழோடு விளையாடு போட்டியில் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த, தி விஜய் மில்லினியம் பள்ளி மாணவியருக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்பட்டது. முதன்மை முதல்வர் நாராயணமூர்த்தி, முதல்வர் ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.