மேலும் செய்திகள்
ரோப் கார் சேவை நேரம் நீட்டிப்பு
08-May-2025
பாப்பிரெட்டிப்பட்டிதிருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் அயோத்தியாப்பட்டணம் வரை, 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. அரூர் ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி கணவாய் வரை சாலையை விரிவுபடுத்தி, 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த, ஓராண்டுக்கு மேல் நடக்கிறது. இதில் தற்போது சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து மஞ்சவாடி கணவாய் வரை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து அரூர் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி அதிக சுமை காரணமாக அச்சாலையில் சேற்றில் சிக்கியது. இதனால் சேலம் -அரூர்-வேலுார் - சென்னை செல்லும் பஸ், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி உள்ளிட்ட போலீசார் அரூரில் இருந்து வரும் சேலம் செல்லும் வாகனங்களை, சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து பொம்மிடி, தீவட்டிப்பட்டி வழியாக, மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்ததால், சேற்றில் சிக்கிய லாரி மீட்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலை சேற்றில் சிக்கிய லாரி அப்புறப் படுத்தப்பட்டது.இதனால் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் சாலையில், 10 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
08-May-2025