போலி ஆவணத்தில் பத்திர பதிவு 2 பேர் மீது போலீசில் புகார்
போலி ஆவணத்தில் பத்திர பதிவு2 பேர் மீது போலீசில் புகார்மாரண்டஹள்ளி, அக். 4- போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த, 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க, மாரண்டஹள்ளி போலீசில், சார் பதிவாளர் புகார் அளித்துள்ளார்.அதில், மாரண்டஹள்ளி சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த, பி.செட்டிஹள்ளியை சேர்ந்தவர் பெனிகின், மற்றும் சாஸ்திரமுட்லுவை சேர்ந்தவர் குமரன். இருவரும், மாரண்டஹள்ளி அடுத்த பெலமாறனஹள்ளியை சேர்ந்த மாரப்பன் என்பவரது இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழை போலியாக தயாரித்து, 2 இடங்களில் அவரது, 153.14 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, மாரண்டஹள்ளி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த, 2023 ஆக., 7 ல் பெனிகின் பெயரில் நிலத்தை பதிவு செய்ய, போலி ஆவணங்களை, குமரன் தயாரித்து கொடுத்துள்ளார். ஆவணங்களை ஆய்வு செய்தபோது, போலி ஆவணம் என தெரியவந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி புகார் படி, பெனிகின், குமரன் ஆகிய இருவர் மீதும், மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.