மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
செந்தில் பப்ளிக், மெட்ரிக் பள்ளி 2ம் ஆண்டு விழாகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, செந்தில் பப்ளிக் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியின், 2ம் ஆண்டு விழா நடந்தது. இதில், எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் குறிக்கோள்களுக்கு, பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் கூடிய ஊக்கத்தை வழங்க அறிவுறுத்தினார். இதில், கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, பர்கூர், தி.மு.க., -- எம்.எல்.ஏ., மதியழகன், பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் பெருமாள்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி நிறுவனர் செந்தில் கந்தசாமி மற்றும் செயலாளர் தனசேகர் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து, உலக அதிசயங்கள் என்ற கருத்தை மையப்படுத்தி, அனைத்து நாடுகளின் கலாசாரத்தை காண்பிக்கும் விதமாக, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பள்ளி நிறுவனர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சி.இ.ஓ., மாதையன், பள்ளி முதன்மை முதல்வர் சீனிவாசன், பப்ளிக் பள்ளி முதல்வர் வேங்கட அழகிரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் வேதகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Jan-2025