உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்தர்மபுரி, :தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின், 108 -வது பிறந்த நாள் விழா தர்மபுரி பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலை மற்றும் உருவப்படங்களுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், பொதுமக்களுக்கு இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவுக்கு நகர செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி ஆகியோர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. * அரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மேல்பாட்சாபேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அரூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பாபு தலைமையில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். * கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பஸ் ஸ்டாண்டில், மத்தூர் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில், எம்.ஜி.ஆர்., 108வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. *ஊத்தங்கரை எம்.எல்.ஏ.,தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து. எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு, மாலை அணிவித்து,மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். *கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். நகர அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், நகர செயலாளர் கேசவன் தலைமையிலும், கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், அடுத்த கிட்டம்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமையிலும், பெத்ததாளப்பள்ளியில், சோக்காடி ராஜன் தலைமையிலும் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. * கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, பாகலுார் ஹவுசிங் போர்டில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகம், ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை, சீனிவாசா தியேட்டர் எதிரே உள்ள கிழக்கு பகுதி அலுவலகம், மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள சாலை மற்றும் ஈஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி