உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்தர்மபுரி:தர்மபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி தலைமையில் நேற்று நடந்தது. கண்காணிப்பு குழு உறுப்பினரான, மாவட்ட கலெக்டர் சதீஸ் முன்னிலை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும், தொடர்புடைய மாவட்ட அளவிலான, அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, துாய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதல்வரின் முகவரி, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு பைபர் நெட், கல்வித்துறையின் சார்பில், அனைவருக்கும் கல்வி இயக்கம், வனத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், பா.மக., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், கூடுதல் கலெக்டர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா உட்பட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ