மேலும் செய்திகள்
காட்டிநாயனப்பள்ளி அரசு பள்ளி ஆண்டு விழா
10-Feb-2025
அரசு பள்ளி ஆண்டு விழாபாப்பிரெட்டிப்பட்டி,:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, கல்வியாளர் நேதாஜி, பி.டி.ஏ., பொருளாளர் கோகுல்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகடை ஆசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ்தென்றல் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் என தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கும், தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் பி.டி.ஏ., தலைவர் கவுதமன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார்.
10-Feb-2025