உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலை அமைக்க பூமி பூஜை

சாலை அமைக்க பூமி பூஜை

சாலை அமைக்க பூமி பூஜைநல்லம்பள்ளி:நல்லம்பள்ளி ஒன்றியம், பாகலஹள்ளி பஞ்., குரும்பட்டி முதல் கடுதுகாரம்பட்டி வரையிலான, 2.60 கி.மீ., தார்ச்சாலை கடந்த, 2016ல் போடப்பட்டது. இவ்வழியாக, விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், பள்ளி கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் சென்று வந்தன. சாலை தரமற்ற நிலையில் இருந்ததால், 3 ஆண்டுகளில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமானது. இதை சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், நபார்டு திட்டத்தின் மூலம், 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பா.ம.க., நிர்வாகிகள் காமராஜ், பாலகிருஷ்ணன், முருகன், ராமமூர்த்தி, மாதவராஜ், வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை