உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் வெறிச்

சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் வெறிச்

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில வாரமாக, வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பகல் மற்றும் இரவில் அதிகமான வெப்பமும், அனல் காற்றும் வீசி வந்தது. இந்நிலையில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக, 36.5 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலையாக, 21.5 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.அதிகபடியான வெயிலின் தாக்கத்தால், மதிய நேரத்தில் சேலம் - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன போக்குவரத்து குறைந்து, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை