உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்
உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்கடத்தூர்:--கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இதில் ஊரக குடியிருப்பு திட்டத்தில், தகுதியான ஒரு பயனாளி கூட விடுபடக்கூடாது. என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலையிலுள்ள மக்கள் எஸ்.டி., பிரிவை சார்ந்தவர்கள். மத்திய மாநில அரசு திட்டங்கள் மூலம், வீடு கட்டினால், அவர்களுக்கு வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். கலெக்டரிடம் அளிக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் துணை பி.டி.ஓ.,க்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்