சிக்கன் கடைக்காரர் கொலை: மனைவியிடம் விசாரணை
சிக்கன் கடைக்காரர் கொலை: மனைவியிடம் விசாரணைபாலக்கோடு:பாலக்கோடு அருகே, சிக்கன் கடை உரிமையாளர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அவரின் மனைவி உட்பட மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனஹள்ளியை சேர்ந்தவர் குமார், 42. இவரது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், இரண்டாவதாக கோவிந்தம்மாள், 40, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். குமார், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே, கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். தம்பதிக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குமார், அவரது கடையில் துாங்க சென்றார். அதிகாலை அவரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது தாய் லட்சுமி தகவலின்படி, சம்பவ இடம் வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் டி.எஸ்.பி., மனோகரன் ஆகியோர் குமார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் குமாரின் மனைவி கோவிந்தம்மாள் உட்பட மூவரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.