மேலும் செய்திகள்
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
19-Mar-2025
வங்கி ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வுபாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு பள்ளிகள், கல்லுாரிகள், தனியார் திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், தேசிய வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.இதில், 2ம் கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், தீயணைப்பு துறை சார்பில், நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீய-ணைப்பு வீரர்கள், வங்கி அலுவலர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, தப்பிப்பது, தீயை எளிதில் எப்படி அணைப்பது, தீ மீட்பு பணி உள்ளிட்டவை குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
19-Mar-2025