உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொம்மிடியில் பொங்கல் விழா 400 பேருக்கு இலவச வேட்டி, சேலை

பொம்மிடியில் பொங்கல் விழா 400 பேருக்கு இலவச வேட்டி, சேலை

பொம்மிடியில் பொங்கல் விழா 400 பேருக்கு இலவச வேட்டி, சேலை பாப்பிரெட்டிப்பட்டி,: பொம்மிடி ஊராட்சியில், பொங்கல் மற்றும் எம்.ஜி.ஆரின், 108வது பிறந்த நாளையொட்டி, 400க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி, சேலை, செங்கரும்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியில், பொங்கல் மற்றும் எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் தலைமையில் நடந்தது.விழாவில், ஊராட்சியிலுள்ள டேங்க் ஆப்பரேட்டர்கள், என்.ஆர்.ஜி.எஸ்., பணித்தள பொறுப்பாளர்கள், துாய்மை பணியாளர்கள், அ.தி.மு.க., கிளை செயலாளர்கள், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் செங்கரும்புகளை, டாக்டர் முருகன் வழங்கினார். பின், 700க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை