மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
2 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
2 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
தர்மபுரி:''தர்மபுரியில் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கலெக்டர் தெரிவித்தார்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்க ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் லில்லி தலைமை வகித்து பேசியதாவது:பிராணிகள் வதைத்தடுப்பு சங்கத்துக்கு தர்மபுரியில் கட்டிடம் கட்ட நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை பாராமரிப்பு துறையினர் வார சந்தை நடக்கும் நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய இடங்களில் கால்நடை உதவி மருத்துவர்கள் கண்காணித்து லாரிகளின் அளவுக்கு அதிகமாக கால்நடைகள் ஏற்றி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மேலும் இன பெருக்கம் செய்யாமல் இருக்க நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் மூலமாக நாய்களை பிடித்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவகை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஞானஉபகாரம், துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிறப்பறிஞர் கவுதமன், பிராணிகள் வதை தடுப்பு சங்க செயலாளர் ராஜேந்திரன், உறுப்பினர் லலிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025