மேலும் செய்திகள்
வன உயிரின பாதுகாப்பு விருது வழங்க அரசு அனுமதி
22-Sep-2024
வன உயிரின வாரவிழாதர்மபுரி, அக். 17-ஆண்டுதோறும் அக்., மாத முதல் வாரத்தில், வன உயிரின வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில், வனங்களையும், வனம் சார்ந்த உயிரினங்களையும், பாதுகாப்பது குறித்து, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், வன உயிரின வாரவிழா, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் தொடங்கின. இதில், தர்மபுரி நகராட்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த, வன உயிரின வார விழாவையொட்டி நடந்த ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகளில், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
22-Sep-2024