விளையாட்டு மைதானத்தில்ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
விளையாட்டு மைதானத்தில்ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கைநல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து, இரும்பு முள்வேலி அமைத்ததை அகற்றக்கோரி, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பூதனஹள்ளி பஞ்.,ல், 700க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில், ஒரு ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தில், அரசு சேவை மைய கட்டடம், பாதுகாப்பு இரும்பு வேலியுடன் கூடிய விளையாட்டு மைதானம் உள்ளது.இதில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மைதானத்திலுள்ள இரும்பு வேலிக்குள், மற்றொரு இரும்பு முள்வேலி அமைத்துள்ளார். இதனால், விளையாட்டு வீரர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றி, விளையாட்டு மைதானத்தை மீட்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து, நடவடிக்கை எடுக்கா விட்டால், கிராம மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என, தெரிவித்துள்ளனர்.