மேலும் செய்திகள்
அ.தி.மு.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
30-Mar-2025
பொ.நடூரில் அ.தி.மு.க.,தண்ணீர் பந்தல் திறப்புபாப்பிரெட்டிப்பட்டி:பொ.நடூரில், அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், அனைத்து பகுதிகளிலும், நீர்மோர் பந்தல் திறக்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம் பொம்மிடி ஊராட்சி பொ.நடூர் பஸ் நிறுத்தத்தில், அ.தி.மு.க., சார்பில் பொம்மிடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் ஏற்பாட்டில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ.,-- கோவிந்தசாமி முன்னிலையில், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பின் பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்ப்பூசணி, உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாகிகள் பெரியகண்ணு, தமிழ்மணி, கிளை செயலாளர் பூபதி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
30-Mar-2025