உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்அரூர்:அரூர் நான்குரோட்டில், நேற்று காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் இளையசெல்வி மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில், 4 யூனிட் கிராவல் மண் இருந்தது. இது குறித்து லாரியின் ஓட்டுனரிடம் விசாரித்த போது, அவர் பட்டவர்த்தியை சேர்ந்த பிரகாஷ் என்பதும், உரிய அனுமதியின்றி ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுனர் மற்றும் லாரியை கிராவல் மண்ணுடன் கைப்பற்றி, உதவி இயக்குனர் அரூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து ஒப்படைத்தார். போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை