மேலும் செய்திகள்
கொட்டகையில் தீ விபத்துமாடு, கன்று குட்டி பலி
12-Apr-2025
கிணற்றில் விழுந்த குழந்தை பலிஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த இருதாளம் அருகே, நெருப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் மனைவி கோகிலா. தம்பதிக்கு, ஹேமந்த் என்ற, 4 வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள ராமசாமியின் விவசாய கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹேமந்த், கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானான். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Apr-2025