உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்பு

இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்பு

இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்புபாப்பிரெட்டிப்பட்டி:--கடத்துார் அடுகே நல்லகுட்லஹள்ளி, நீடூரை சேர்ந்தவர் லோகநாதன், 42. கூலித்தொழிலாளி. இவர் நேற்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய, அவரது உறவினர்கள் குழி தோண்டினர். இதனால், சுடுகாட்டிற்கு அருகேயுள்ள விவசாயிகள், விவசாய நிலம் ஓரம் குழி எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இறந்தவரின் உறவினர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த கடத்துார் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் உள்ளிட்ட வருவாய் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், சுடுகாட்டில் குழி தோண்டப்பட்டு லோகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை