உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / துாய்மை இந்தியா இயக்கத்தில் மரக்கன்று நடல்

துாய்மை இந்தியா இயக்கத்தில் மரக்கன்று நடல்

தர்மபுரி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சேலம் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி சார்பில், துாய்மை இந்தியா இயக்கத்தில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடி அருகே, தொம்பரகாம்பட்டியில் நேற்று நடந்தது. இதில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், பி.டி.ஓ., லோகனாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் முரளி மற்றும் மதுசூதனன், பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் விக்னேஷ், தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !