உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சரக விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சாதனை

சரக விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சாதனை

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், சரக அளவில் நடந்து வரும் விளை-யாட்டு போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்-ளிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில், வயதுவரம்பு அடிப்ப-டையில் மேசைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.வளையப்பந்து போட்டியில், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவர் ஆகாஷ் முதலிடமும், இரட்டையர் பிரிவில் ஆகாஷ் மற்றும் அபிஷேக், 2ம் இடமும், 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஈசன், 2ம் இடமும், 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அஜய்ஜோதி முதலிடமும், இரட்டையர் பிரிவில் அஜய்ஜோதி மற்றும் ஜெய-சூர்யா முதலிடமும் பிடித்துள்ளனர்.பெண்களுக்கான, 14 வய-துக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் மாணவி லிர்த்திகா முதலி-டமும், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் மோனிகா, 2ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்விஆசிரி-யர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை, பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி