உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டியில்காட்டெருமையால் பீதி

பாப்பிரெட்டிப்பட்டியில்காட்டெருமையால் பீதி

பாப்பிரெட்டிப்பட்டி:---பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை, குடிநீர் மற்றும் உணவுகள் தேடி இரவில் வனப்பகுதியை விட்டு கிராம பகுதிகளுக்கு வருவது வழக்கம்.சில நேரங்களில் வரும் காட்டெருமைகள், திரும்ப வனப்பகுதிக்குள் சென்று விடும். ஆனால் நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த, 2 காட்டெருமைகள் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார், பூனையானுார் பகுதிகளில் விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்தன.இதனால், அப்பகுதி சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைந்து காட்டெருமைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி