குப்பையுடன் மழைநீர்தேங்கியதால் துர்நாற்றம்
குப்பையுடன் மழைநீர்தேங்கியதால் துர்நாற்றம் பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., வழித்தடத்தில் பெரியகாடு பிரிவு சாலை பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டி குவித்து வருகின்றனர். இவற்றை அள்ள அந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிகளவு சேர்ந்துவிட்டது. நேற்று முன்தினம் இரவு, பெய்த கனமழையால், பெரியகாடு பிரிவு சாலை பகுதியில் குப்பை கொட்டிய இடத்தில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முகம் சுளித்து செல்கின்றனர். எனவே குப்பை, கழிவுகளை அகற்றி, அந்த இடத்தில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.*********************