உயிரிழந்த தலைமை காவலர்21 குண்டு முழங்க உடல் அடக்கம்
உயிரிழந்த தலைமை காவலர்21 குண்டு முழங்க உடல் அடக்கம்அரூர்:விபத்தில் உயிரிழந்த போலீஸ் உடல், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நெருப்பாண்டகுப்பத்தை சேர்ந்தவர் சிவஞானம், 41. இவர், கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு பணி முடிந்து, தர்மபுரியில் இருந்து வீட்டிற்கு ஹோண்டா ஷைன் பைக்கில் வந்தார்.அரூர் - தர்மபுரி சாலையில், செம்மன அள்ளி கணவாய் தோட்டம் பாலத்தில் பைக் மோதியது. இதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் நெருப்பாண்டகுப்பத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் சக்திவேல், சதீஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.