உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ரூ.82.15 கோடியில் வளர்ச்சி பணிவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்தர்மபுரி:தர்மபுரி நகராட்சியில், உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டத்தில், 14 வார்டுகளை உள்ளடக்கிய நகராட்சி பகுதிகளில், 82.15 கோடி ரூபாய் மதிப்பில், 46 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் கழிவு நீரேற்றம் நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், அன்னசாகரம் பகுதி, 32-வது வார்டில், 2.50 மீ., விட்டம், 5.30 மீ., ஆழம் கொண்ட சேகரிப்பு தொட்டியுடன் கழிவு நீரேற்ற நிலையம் அமைக்கப்பட்டு வருவதை, கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்பாது, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், நகராட்சி சேர்மன் லட்சுமி, கமிஷ்னர் சேகர், பொறியாளர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் மாலதி, நகர் நல அலுவலர் லட்ஷிய வர்ணா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ