உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ஊத்தங்கரை, ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்கராப்பேட்டை, அத்திப்பாடி, நடுப்பட்டி, நாய்கனுார், வெள்ளகுட்டை ஆகிய பஞ்., மக்கள் பன்பெறும் வகையில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது. முகாமில் வருவாய் துறை, மின் துறை, வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.ஒன்றிய சேர்மன் உஷாராணி முகாமை துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் தவமணி, பாலாஜி, தாசில்தார் திருமால், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்., தலைவர்கள் அஹமத்பாஷா, சுதா, குப்புசாமி, சரோஜா, சரஸ்வதி மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை