மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
28-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்-பள்ளி அரசு மாதிரிப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து, 41 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்-கினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில், 6.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடம் மற்றும் பொருட்கள் இருப்பு அறையை திறந்து வைத்தார். மேலும், பள்ளியில் நடந்த, வட்டார அளவிலான மாணவ, மாணவியருக்கான வாலிபால் போட்டியை துவக்கி வைத்தார்.
28-Aug-2024