உள்ளூர் செய்திகள்

அரூரில் மழை

அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த, 2 நாட்களாக மாலை நேரங்களில் சாரல்மழை பெய்தது. நேற்று மூன்றாவது நாளாக, அரூர் சுற்று வட்டாரத்தில், மாலை, 4:15 முதல், 5:00 மணி வரை விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. அரூரில், நான்கு ரோடு, பாட்சாபேட்டை, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ