100 நாள் வேலை வழங்கவில்லைகிராம பெண்கள் குற்றச்சாட்டு
100 நாள் வேலை வழங்கவில்லைகிராம பெண்கள் குற்றச்சாட்டுபாலக்கோடு:பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 9 கிராமங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 800 பேர் வேலை அட்டை பெற்றுள்ளனர். இதில், பலருக்கு வேலை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, பூதிப்பட்டியை சேர்ந்த லட்சுமி கூறுகையில், ''பூதிப்பட்டி கிராமத்தில் உள்ளவர்களுக்கு, 100 நாள் வேலை வழங்கவில்லை. எங்கள் கிராமத்தில், 10 பேருக்கு மட்டும் வேலை வழங்குகின்றனர். அதற்கு முறையாக பணம் வழங்குவதில்லை. வேலை வழங்கும் பணிதள பொறுப்பாளர், 200 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக தெரிவித்தனர். இது குறித்து, பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. எனவே, பணிகளை முறைபடுத்தி அனைவருக்கும், வேலை வழங்க வேண்டும்,'' என்றார்.இது குறித்து, பாலக்கோடு பி.டி.ஓ., ரேணுகா கூறுகையில், ''பூகானஹள்ளி பஞ்.,ல் தற்போது, ஏரி வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. மேலும், புதிய பணிகள் வந்தால் தான், வேலை வழங்கப்படும். விருப்பபட்டு வருபவர்களுக்கு மட்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான வேலைக்கு அனுப்புகிறோம். இதற்கு பலர் வருவதில்லை. முறைகேடுகள் குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.