மேலும் செய்திகள்
சாலை நடுவே மின் கம்பம் அகற்றாமல் விரிவாக்க பணி
06-Aug-2024
அரூர்: முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் வழியாக, தர்மபுரி -- தானிப்பாடி இடையே, 410 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த, 2022 ஐூன்., 19ல் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிலையில் அரூரில் இருந்து தானிப்பாடி வரை, 4 வழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சாலை கட்டமைத்தல், சாலை பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கியதுடன், சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தர்மபுரி கோட்டப் பொறி-யாளர் நாகராஜி, சேலம் கோட்ட பொறியாளர் கதிரேசன் உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.
06-Aug-2024