மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்திகள்
03-Oct-2026
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்-ளியில் என்.எஸ். எஸ்., முகாம் கடந்த, 26 முதல் அக்., 2 வரை தலைமை ஆசிரியர் மணி தலைமையில் நடந்தது.உதவி தலைமை ஆசிரியர் ராஜசேகர், மோரனஹள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர், கடத்துார் பி.டி.ஓ., கலைச்செல்வி முன்-னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர், திட்ட அலுவலர் பரம-சிவம் வரவேற்றார்.முகாமில் பள்ளி வளாக துாய்மை செய்தல், சாலை பாதுகாப்பு பணி, பனை விதை நடல், மரக்கன்று நடுதல், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு, தலைக்கவசம் அணிவதன் அவ-சியம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு மற்றும் விழிப்-புணர்வு உள்ளிட்ட சமூக பணிகளில் மாணவர்கள் ஈடுபட்-டனர்.மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பலர் பேசினர். உதவி திட்ட அலுவலர் சிவநதி நன்றி கூறினார்.
03-Oct-2026