மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
16 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
16 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியம், வகுத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 40 ஆண்டு நிறைவு விழா, முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தலைமையில் நடந்தது.அரூர் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி, வட்டார கல்வி அலுவலர்கள் மகேந்திரன், பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சிவாஜி வரவேற்றார். விழாவில், தொடக்கக் கல்வி துறை இணை இயக்குனர் கோபிதாஸ் பள்ளியின், 40ம் ஆண்டு நிறைவு விழா, கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.பின் தன் சொந்த செலவில், பள்ளி மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கினார். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற அக்கிராம மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் தவமணி மணி, முனைவர் நாகராணி கோபிதாஸ், தலைமை ஆசிரியர் சென்னகிருஷ்ணன், ஆசிரியர்கள் ஐயனார், ரமேஷ், கூட்டுறவு சார்பதிவாளர் ராமன், முன்னாள் மாணவர்கள் மாணிக்கவாசகம், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
16 hour(s) ago
16 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025