மனித சங்கிலி விழிப்புணர்வு
மனித சங்கிலி விழிப்புணர்வுஅரூர், ஆக. 24-அரூர், அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் மங்கையற்கரசி தலைமை வகித்தார். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணியை, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் துவக்கி வைத்தார். இதில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவியர் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். தொடர்ந்து, கச்சேரிமேட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.