| ADDED : ஆக 03, 2024 01:20 AM
நல்லம்பள்ளி, பள்ளி மேலாண்மை குழு, மறு கட்டமைப்பிற்கான ஆலோசனைக் கூட்டம், ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. ஆசிரியர் நடராஜ் வரவேற்புரை ஆற்றினார். எஸ்.எம்.சி., தலைவி பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் தலைமை தாங்கி பேசியதாவது:ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை, 1,140 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நடந்து முடிந்த நீட் தேர்வில் இப்பள்ளியில் படித்த, 12 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில், பள்ளி மேலாண்மை குழுவில் சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல், சிறந்த பசுமை பள்ளியாகவும், தர்மபுரி மாவட்டத்தில் இரண்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பள்ளியாக உள்ளது. பள்ளி மேலாண்மை குழு மூலம், பள்ளியின் வளர்ச்சி மாணவர்களின் தேர்ச்சி உள்ளிட்டவற்றை அதிகரிப்பதில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.