உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய கைத்தறி தின மருத்துவ முகாம்

தேசிய கைத்தறி தின மருத்துவ முகாம்

தர்மபுரி, தர்மபுரியில், 10-வது தேசிய கைத்தறி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், எஸ்.ஏ.,5 லளிகம் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில், மருத்துவ முகாமை, தர்மபுரி கலெக்டர் சாந்தி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளி ஒருவருக்கு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், 5 பயனாளிகளுக்கு, 5.28 லட்சம் ரூபாய் மதிப்பில் கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை, கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில், 4 பயனாளிகளுக்கு மாதந்தோறும், 1,200 ரூபாய்- வீதம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் என, 10 கைத்தறி நெசவாளர்களுக்கு, 8.78 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, தர்மபுரி நகராட்சி, நெசவாளர் காலனியிலுள்ள, லுாம்வேர்ல்ட் விற்பனை வளாகத்தில், கைத்தறி ஜவுளிகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இதில், சேலம் சரக கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் விஜயலட்சுமி, தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, சேலம் சரகத்தை சார்ந்த கைத்தறி துறை அலுவலர்கள், பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ