உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியை சேர்ந்தவர் நெருப்பூரான் மாதையன், 55. இவருக்கு மூன்று மகன்கள். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த இவர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஒகேனக்கல்கூட்டு குடிநீர் திட்ட தொட்டியின் பின்புறமுள்ள பெரியபள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த யானை, அவரை மிதித்து கொன்றது. பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால், அவரது சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ